இசக்கி அம்மன் – அம்பத்தூர் ஓம் சக்திநகர்

தலபெருமை: 

தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர்.

isakki - 2026
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம்சக்திநகரில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் ஓம்சக்தி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

உக்ரதெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள்.  இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது.

குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள்.

கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவஅமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.

ஆடித்திருவிழா: இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்றுநாட்கள் திருவிழா உண்டு.

பிரார்த்தனை:

திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

முகவரி:

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில்,
ஓம் சக்தி நகர்,
கள்ளிக்குப்பம்,
அம்பத்தூர்,
சென்னை. 

போன்:   +91 98407 36575.

இருப்பிடம்: அம்பத்தூர் ஓ.டி.பஸ்ஸ்டாண்டில் இருந்து செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்) ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் கள்ளிக்குப்பம். இங்கிருந்து பிரியும்ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்தில் ஓம்சக்திநகர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories