நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில், பக்தர்கள் யாரும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
கோவிலில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்கக் கூடாது. மாறாக செம்பு மற்றும் ஸ்டீல் பாட்டில்களில் பக்தர்களுக்கு தண்ணீர் விற்க வேண்டும் என்றும், திருமலையில் உள்ள உள்ளூர் வாசிகள், வர்த்தகர்கள் இரண்டு மாதங்களுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.