கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு இன்று முதல் ஆனி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது.திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று(ஜூன் 15) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள்எதுவும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், நெய்யபிஷேகம் கணபதிஹாேமம் உள்ளிட்டவழக்கமான பூஜைகள் துவங்கியது. எல்லாநாட்களிலும் உஷ பூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை மறறும் படிபூஜையும் நடக்கும். ஜூன் 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.இன்று காலை முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி க்கப்பட்டனர். சபரிமலை செயல் அலுவலராக கிருண்குமார், நிர்வாக அதிகாரியாக சாந்தகுமார் பொறுப்பேற்றனர்




