December 7, 2025, 5:01 PM
27.9 C
Chennai

துபாயில்  பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டுள்ள இந்து கோயில் –

screenshot24858 1664988046 - 2025

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயிலை அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்துமுதலே இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

துபாயில் 1958 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த சிந்தி குரு தர்பாரின் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. தற்போது சிறப்பான கட்டமைப்புடன் கோயில் உருவாகி இருக்கிறது.துபாயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஒரு இந்து கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கோயில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி மறுத்த அந்நாட்டு அரசு இதனை தொடர அனுமதித்தது.

இந்த கோயிலின் திறப்பு விழா துபாயில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் கலந்துகொண்டு கோயிலை திறந்துவைத்தார். இந்த கோயில் திறப்பு விழாவில் இந்திய தூதர் சுஜாய சுதீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோவில் கட்டுவதற்கான நிலம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. மிகவும் வித்தியாசமான அழகான கட்டிடக் கலையுடன் பிரம்மாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 80 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த இந்து கோயிலில் அனைத்து மதத்தினரும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய, அரபு கட்டிடக்கலை வடிவமைப்புடன் துபாயில் பிரம்மாண்டமான இந்து கோயில் திறப்பு

இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் சகிப்புத்தன்மை, அமைதி, நல்லிணக்கத்தை வலியு றுத்துவதாக அமைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாய் நகருக்கு அருகே அமைந்துள்ளது துறைமுக நகரம் ஜெபல் அலி. மிகப்பெரிய வர்த்தக மையமாகவும் இது விளங்குகிறது.

இக்கோவிலில் திறப்பு விழா நடந்தபோது இசைக் கலைஞர்கள் மேள, தாளங்கள் முழங்க, அர்ச்சகர்கள் ‘ஓம் சாந்தி, சாந்தி ஓம்’என முழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள், இந்திய சமுதாய அமைப்பின் உறுப்பின ர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து அபு தாபியில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “துபாயில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயிலை யுஏஇ அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அல் நயன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தூதர் சஞ்சய் சுதிர், யுஏஇ-யில் வசிக்கும் 35 லட்சம் இந்தியர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் அந்நாட்டு அரசுக்குநன்றி தெரிவித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய தூதர் சுதிர் கூறும் போது, “துபாயில் இந்து கோயில்திறக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது யுஏஇ-யில் வசிக்கும் இந்துக்களின் மத ரீதியிலான விருப்பத்தை பூர்த்தி செய்யும்” என்றார். இந்திய மற்றும் அரபு கட்டிடக்கலை வடிவமைப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் சகிப்புத்தன்மை, அமைதி,நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இதில் சிவன், கிருஷ்ணர், விநாயகர் மற்றும் மகாலட்சுமி உட்பட 16 தெய்வங்களின் சிலை கள் நிறுவப்பட்டுள்ளன. 

இந்து மதத்தில் பல்வேறு சாமிகளை வழிபடும் மக்களும் இங்கு வந்து செல்லும் வகையில் சிவன், கிருஷ்ணர், மகாலட்சுமி, விநாயகர், பெருமாள், முருகன் சிலைகள் என மொத்த 16 சாமி சிலைகள் இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. 16 சிலைகளுக்கு தனித்தனியே இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த கோயில் கட்டிடத்தில் மிகப்பெரிய தாமரை வடிவமைக்கப்பட்டு காண்போரை கவர்கிறது. இந்த கோயிலில் பக்தர்களுக்கான மிகப்பெரிய கூடம், திருமண அரங்கம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இங்குள்ள திருமண அரங்கங்களை பயன்படுத்த QR கோட் ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

screenshot24859 1664988055 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories