
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரோப் கார் சேவை பிப்.24 வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக ரோப் கார் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. தினசரி அதிகாலை தொடங்கி இரவுவரை செயல்படும் ரோப் கார் சேவை
மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வின்ச் மின் இழுவை ரயில் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்தி பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.7.17 கோடி கிடைத்துள்ளது.தொடர்ந்து உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தா்கள் வருகை மிக அதிகமாக இருந்ததன் காரணமாக 26 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின.
இதையடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் கடந்த இரு நாள்களாக எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ. 5 கோடியே 7 லட்சம் கிடைத்தது. மேலும், தங்கம் 500 கிராம், வெள்ளி 15 கிலோ, வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 830-ம் கிடைத்தன.

இதுதவிர, பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தினா். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரிப் பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், திண்டுக்கல் மண்டல இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் சுரேஷ், அறங்காவலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இன்று தொடர்ந்து உண்டியல் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இறுதி வருவாய் அறிக்கை எண்ணிக்கை முடிந்ததும் அறிவிக்கப்படும்




