இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியிடம் 7 வயது சிறுவன் ஒருவர் ஆட்டோகிராப் வாங்கியுள்ளது வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் வசிக்கும் சிறுவர் முதல் வயதானவர்கள் அனைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் ரசிகர்களாக மாறி வருகின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், ஜமைக்காவில் 7 வயது சிறுவன் ஒருவன், கோலியிடம் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.



