
ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 33ஆவது ஆட்டம் – சன்ரைசர்ஸ் vs டெல்லி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் முதல் அணியின் தரம் எப்படியிருக்கவேண்டுமோ அப்படி விளையாடியது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமாக விளையாடியது. பூவா, தலையாவில் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்ய முடிவுசெய்தது.
முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் வார்னர் அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் அப்படியிப்படி என விளையாடி 20 ஓவரிகளில் 134 ரன் எடுத்தனர். இரண்டாவதாக விளையாடிய டெல்லி அணியின் ப்ருத்வி ஷா 11 ரன்னில், மூன்றாவது ஓவரில் அவுட்டானார். ஷிகர் தவான் அடுத்த எட்டு ஓவர்கள் விளையாடினார்.
42 ரன் எடுத்து அவுட்டானார். பின்னர் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் இருவரும் 17.5 ஓவர்களில் 139 ரன் அடித்து தமது அணியை வெற்றிபெறச் செய்தனர்.
டெல்லி அணியின் அன்ரிக் நாட்ஜே விளையாட்டு நாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்து கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை அணிக்கும் அபுதாபியில் ஆட்டம் நடைபெறும்.