பேசில் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை பட்டம் வென்ற விக்டர் எக்சல்சனை போராடி வீழ்த்தியதன் மூலம் சுவிஸ் ஓபன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த் கடாம்பி.
21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் அவர் தன்னை எதிர்த்து விளையாடிய எக்சல்சனை வீழ்த்தினார். இது இந்த வருடம் இவர் வெல்லும் முதல் பட்டம் என்பதும் , சுவிஸ் ஓபன் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய ஆண் வீரர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
ஸ்ரீகாந்த் தற்பொழுது உலக அளவில் நான்காவது ரேங் வகிக்கிறார்.இங்கிலாந்து ஓபன் போட்டியில் சாய்னா இறுதி போட்டியில் மோசமாக விளையாடி தோற்றப் பின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .ஸ்ரீகாந்தும் இங்கிலாந்து ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அடுத்து நடக்க இருக்கும் இந்திய ஓபனில் இவர் பட்டம் வெல்வாரா என்பதே இப்போதையக் கேள்வி.