ipl 2022 - 2026

IPL 2022: பஞ்சாப் vs பெங்களூரு

விளையாட்டு Featured இந்தியா
ipl 2022 - 2026

ஐ.பி.எல்., 2022 – பஞ்சாப் vs பெங்களூரு
– K. V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 60ஆவது ஆட்டம் மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கிடையே நடந்தது. பஞ்சாப் அணி (209/9, பெய்ர்ஸ்டோ 66, லிவிங்ஸ்டோன் 70, ஹர்ஷல் படேல் 4/34) பெங்களூரு அணியை (155/9, மேக்ஸ்வெல் 35, படிதர் 26, கோலி 20, ரபாடா 3/21) 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பஞ்சாப் அணியை மட்டையாடச்சொன்னது. தொடக்க வீரர்கள் ஜானி பெய்ர்ஸ்டோ, ஷிகர் தவான் (15 பந்துகள் 21 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். பானுகா ஒரு ரன்னில் அவுட்டாக, அதன் பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் (70 ரன், 42 பந்துகள், 5 ஃபோர், 4 சிக்சர்) பெயர்ஸ்டோவுடன் (66 ரன், 29 பந்துகள், 4 ஃபோர், ஏழு சிக்சர்கள்) இணைந்து அணியின் ஸ்கோரை 101க்கு உயர்த்தியபோது பெய்ர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ரன்ரேட் ஓவருக்கு 11 ரன் என்ற வீதத்தில் இருந்தது.

லிவிங்ஸ்டோன் 19.2 ஓவர் வரை ஆடினார். ஆனால் பிற வீரர்கள் சரியாக விளையாடததால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இல்லையெனில் ஏறத்தாழ் 220 ரன் அளவிற்கு அணியின் ஸ்கோர் சென்றிருக்கும். அதன் பின்னர் ஆட வந்த பெங்களூரு அணியின் ஸ்டார் பேட்டர்கள் நிலைத்து ஆடவில்லை.

விராட் கோலி 20 ரன் மட்டுமே அடித்தார். ட்யூ பிளேசிஸ் (10), படிதர் (26), லோமொர் (6), தினேஷ் கார்த்திக் (11), ஷபாஸ் அகமது (9), ஹர்ஷல் படேல் (11), வனிந்து (1) என அனைவரும் குறைந்த அளவு ஸ்கோரில் ஆட்டமிழந்தனர். எனவே பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து, தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் பஞ்சாப் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. தோல்விக்குப் பின்னரும் பெங்களூரு அணி நாலாவது இடத்தில் உள்ளது. பஞ்சாபிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன (டெல்லி & சன்ரைசர்ஸ்); பெங்களூருவிற்கு இன்னமும் குஜராத் அணிக்கெதிரான ஒரு போட்டி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.