T20 WC 2022: அரையிறுதியில் இந்திய, பாகிஸ்தான் அணிகள்!

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – 22ம் நாள் – 6.11.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்திய பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குச் சென்றன

இன்று குரூப் 2 பிரிவின் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. அடிலெய்ட் மைதானத்தில் நெதர்லாந்து தென் ஆப்பிரிக்க அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் அதே மைதானத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளும் விளையாடின. மூன்றாவது ஆட்டத்தில் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா ஜிம்பாபே அணிகள் மோதின. 

முதல் ஆட்டம்: தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து

நெதர்லாந்து அணி (158/4, அக்கர்மேன் 41*, மைபர்க் 37, கூப்பர் 35, மஹராஜ் 2-27) தென்னாப்பிரிக்க அணியை வை 8 விக்கெட்டுக்கு 145 (ரோசோவ் 25, குளோவர் 3-9, கிளாசென் 2-20, டி லீட் 2-25) 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி தோல்வி; நெதர்லாந்து அணிக்கு பிரபலமான வெற்றி என தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவுகள் இன்று முடிவுக்கு வந்தன.

இந்த முடிவால் இந்தியாவுக்கு அரையிறுதியில் இடம் உறுதியானது, அதே நேரத்தில் பங்களாதேஷ்- பாகிஸ்தான் ஆட்டம் ஒரு நாக் அவுட் ஆட்டம் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணி இன்னும் சில காலத்திற்கு தங்களது தோல்வியை நினைத்து வருந்தும். அதே நேரத்தில் நெதர்லாந்து, அணி தங்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எழுதியுள்ளது. சூப்பர் 12க்கு தகுதி பெறுவதே ஒரு பெரிய விஷயம். தற்போது குழுவில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்துள்ளதால் அந்த அணி அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டார்கள்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

நெதர்லாந்துடன், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளும் இந்த வெற்றியைக் கொண்டாடியிருக்கும். பிற்பகலில் அந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் – தென்னாப்பிரிக்கா வென்றிருந்தால் ஒரு தேவையில்லாத ஆட்டமாக இறந்திருக்கக்கூடும். இப்போது குரூப் 2 இலிருந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிக்க நாக் அவுட் ஆட்டமாக அது மாறிவிட்டது,

நெதர்லாந்தின் வெற்றியினால் இந்தியாவும் இறுதி நான்குக்கு தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்காவிற்கு 29 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வான் டெர் மெர்வே, பிராண்டன் குளோவரின் பந்தில் டேவிட் மில்லர் கொடுத்த ஒரு கேட்ச்சைப் பிடிக்க, ஷார்ட் ஃபைன்-லெக்கில் இருந்து ஸ்கொயர் லெக்கை நோக்கி கிட்டத்தட்ட 20 கெஜம் பின்னால் ஓடினார்.

சூரியனை நேராகப் பார்த்துக் கொண்டே, காற்றில் சுழன்று கொண்டிருந்த பந்தை ஒரு பிளைண்டரை இழுத்தபடி அவர் டைவ் செய்து பந்தைப் பிடித்து மில்லரை ஆட்டமிழக்கச் செய்தார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய தருணம் அது.

இரண்டாவது ஆட்டம், பாகிஸ்தான்-வங்கதேசம்

வங்கதேச அணி (127/8, நஜ்முல் 54, சௌம்ய சர்கார் 20, அஃபிஃப் ஹொசேன் 24, ஷா அஃப்ரிடி 4/22) பாகிஸ்தான் அணியிடம் (18.1 ஓவரில் 128/5, ரிஸ்வான் 32, பாபர் ஆசம் 25, முகம்மது ஹாரிஸ் 31, ஷான் மசூத் 24) ஐந்து விக்கட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் நஜ்முல் 48 பந்துகளில் 54 ரன் அடித்தார். பிற வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் எட்டு விக்கட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 128 ரன் என்ற எளிய இலக்கை பாகிஸ்தான் அணி சிறிது தடுமாறினாலும் 18.1 ஓவரில் எட்டியது.

மூன்றாவது ஆட்டம், இந்தியா-ஜிம்பாபே

இந்திய அணி (186/5, சூர்யகுமார் யாதவ் 61,ராகுல் 51, விராட் 26, ஹார்திக் 18, ரோஹித் 15, வில்லியம்ஸ் 2/9) ஜிம்பாபே அணியை (17.2 ஓவரில் 117 ஆல் அவுட், ரியன் பர்ல் 35, சிக்கந்தர் ராசா 34, அஷ்வின் 3/22, ஷமி 2/14, பாண்ட்யா 2/16) 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா (13 பந்துகளில் 15 ரன்) சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். மெல்பர்ன் மைதானத்தின் பவுண்டரி கோடு சுமார் 84 மீட்டர் தொலைவுள்ளது. அதே சமயம் ராகுல் (35 பந்துகளில் 51 ரன்) அநாயசமாக மூன்று சிக்சர்கள் அடித்தார். பின்னால் வந்த சூர்யகுமார் யாதவ் (25 பந்தில் 61 ரன்) நாலு சிக்சர் அடித்தார். தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக ஆடிய ரிஷப் பந்த் இன்று சோபிக்கவில்லை. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

பின்னர் ஆடவந்த ஜிம்பாபே அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். மதிவிரே, சக்பாவா இருவரும் புவனேஷ் குமார், அர்ஷதீப் பந்துகளில் ஆட்டமிழந்தனர். அஷ்வின் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். எனவே ஜிம்பாபே அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பாகிஸ்தான் அணி ஆறு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.

முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நவம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே நடக்கும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இந்திய, இங்கிலாந்து அணிகளௌக்கிடையே அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 10ஆம் தேதி நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Entertainment News

Popular Categories