
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
இந்தியா வங்கதேசம் இரண்டாவது ஒருநாள் போட்டி – 07.12.2022 – மெஹதி ஹசன் மிராஸின் சிறப்பான ஆட்டம்
வங்கதேச அணி (271/7, மெஹதி 100*, மகமதுல்லா 77, வாஷிங்டன் சுந்தர் 3/37) இந்திய அணியை (50 ஓவரில் 266/6, ஷ்ரேயாஸ் ஐயர் 82, அக்சர் படேல் 56, ரோஹித் 51*, எபதூத் 3/45, மெஹதி 2/39) ஐந்து ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய மஹ்முதுல்லா 77 ரன்களும், 8வது வீரராக களமிறங்கிய மெஹதி ஹசன் மிராஸ் 100 ரன்களும் விளாசியதால் அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (5 ரன்), ஷிகர் தவான் (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். வங்கதேச அணி விளையாடும்போது அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவிற்கு கயில் அடிபட்டு அவர் மைதானத்திய விட்டு வெளியேறினார். என்வே அவர் தொடக்க வீரராக இரங்கவில்லை.
மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 82 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 56 ரன்கள் சேர்த்தார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் போதிய ரன்ரேட்டை எட்டவில்லை. கடைசி நேரத்தில் கை காயத்துடன் விளையாட ரோஹித் ஷர்மா வந்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டி வெற்றியை நெருங்கினார்.
கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) விளாசினார். 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.