IPL 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

ipl 2024 - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 28.03.2024 – ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

          ராஜஸ்தான் அணி (185/5, ரியான் பராக் 84*, அஷ்வின் 29, ஜுரல் 20) டெல்லி அணியை (173/5, வார்னர் 49, ஸ்டப்ஸ் 44*, ரிஷப் பந்த் 28, மார்ஷ் 23, பர்ஜர் 2/29, சாஹல் 2/19) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் சரியாக ஆடவில்லை.

இரண்டாவது ஓவரில் 5 ரன்னுக்கு அவர் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் சஞ்சு சாம்சனும் (15 ரன்) ஆடமிழந்தார். எட்டாவது ஓவரில் ஜாஸ் பட்லர் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/3. அந்த இடத்தில் இருந்து 20ஆவது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 185 ரன் எடுத்தது என்றால் அதற்கு  அஷ்வின் (19 பந்துகளில் 29 ரன், 3 சிக்சர்) துருவ் ஜுரல் (12 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர்) ஆகியோர் விளையாடிய விதம்தான் காரணம். இவர்களோடு ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன், ஏழு ஃபோர், ஆறு சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். குறிப்பாக 20ஆவது ஓவரில் 20 ரன் எடுத்தார்.

          இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. நாலாவது ஓவர், இரண்டாவது பந்தில் மார்ஷ் (12 பந்தில் 23 ரன்) அவுட்டானபோது அணி 30 ரன் எடுத்திருந்தது. அந்த ஓவரிலேயே ரிக்கி புயி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் (34 பந்துகளில் 49 ரன்)12ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ஸ்டப்ஸ் சிறப்பாக ஆடியும் டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 12 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் கொல்கொத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories