சாம்பியன்ஸ் ட்ராபி: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்த்!

champions trophy - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா – அரையிறுதி ஆட்டம் – 05.03.2025

நியூசிலாந்து அணி அபார வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணி (50 ஓவர்களில் 362/6, ரவின் ரச்சீந்திரா 108, கேன் வில்லியம்சன் 102, டேரியல் மிட்சல் 49, கிளன் பிலிப்ஸ் 49, லுங்கி இங்கிடி 3/72, ரபாடா 2/70, முல்டர் 1/48) தென் ஆப்பிரிக்க அணியை (50 ஓவர்களில் 312/9, டேவிட் மில்லர் 100, வான் டெர் டுஸ்ஸான் 69, பவுமா 56, மர்க்ரம் 31, மிட்சல் சாண்ட்னர் 3/43, கிளன் பிலிப்ஸ் 2/27, மேட் ஹென்றி 2/43, ரவீந்திரா 1/20, ப்ரேஸ்வெல் 1/53) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ரச்சின் ரவீந்திரா அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு “சோக்கர்ஸ்” என்ற பெயர் உண்டு. அதாவது வெற்றிக்கு அருகில் வந்து தோற்பவர்கள் என்று பொருள். இன்று அந்த அணி மீண்டும் ஒருமுறை தாங்கள் ஒரு சோக்கர்ஸ் என நிரூபித்தது.

நியூசிலாந்து அணி கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றபோது, அந்த அணி வேண்டும் என்றே தோற்றார்கள் என ஒரு பேச்சு எழுந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவை வெல்வதை விட தென் ஆப்பிரிக்காவை வெல்வது சுலபம் என அனைவருமே எண்ணினார்கள். நினைத்து போலவே நடந்தது.   

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இறுதி ஆட்டம் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மார்ச்சு ஒன்பதாம் தேதி துபாயில் நடைபெறும்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories