
சாம்பியன்ஸ் ட்ராபி – நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா – அரையிறுதி ஆட்டம் – 05.03.2025
நியூசிலாந்து அணி அபார வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து அணி (50 ஓவர்களில் 362/6, ரவின் ரச்சீந்திரா 108, கேன் வில்லியம்சன் 102, டேரியல் மிட்சல் 49, கிளன் பிலிப்ஸ் 49, லுங்கி இங்கிடி 3/72, ரபாடா 2/70, முல்டர் 1/48) தென் ஆப்பிரிக்க அணியை (50 ஓவர்களில் 312/9, டேவிட் மில்லர் 100, வான் டெர் டுஸ்ஸான் 69, பவுமா 56, மர்க்ரம் 31, மிட்சல் சாண்ட்னர் 3/43, கிளன் பிலிப்ஸ் 2/27, மேட் ஹென்றி 2/43, ரவீந்திரா 1/20, ப்ரேஸ்வெல் 1/53) 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ரச்சின் ரவீந்திரா அறிவிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு “சோக்கர்ஸ்” என்ற பெயர் உண்டு. அதாவது வெற்றிக்கு அருகில் வந்து தோற்பவர்கள் என்று பொருள். இன்று அந்த அணி மீண்டும் ஒருமுறை தாங்கள் ஒரு சோக்கர்ஸ் என நிரூபித்தது.
நியூசிலாந்து அணி கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றபோது, அந்த அணி வேண்டும் என்றே தோற்றார்கள் என ஒரு பேச்சு எழுந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவை வெல்வதை விட தென் ஆப்பிரிக்காவை வெல்வது சுலபம் என அனைவருமே எண்ணினார்கள். நினைத்து போலவே நடந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது.
இறுதி ஆட்டம் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மார்ச்சு ஒன்பதாம் தேதி துபாயில் நடைபெறும்.