IPL 2025: பிரமாண்ட வெற்றி பெற்ற கோல்கத்தா அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs ஹைதராபாத் – கொல்கொத்தா – 03.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (200/6, வெங்கடேஷ் ஐயர் 60, அங்கிரிஷ் ரகுவன்ஷி 50, அஜிங்க்யா ரஹானே 38, ரிங்கு சிங் 32, ஷமி, கம்மின்ஸ், சீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், மெண்டிஸ் தலா ஒரு விக்கட்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (16.4 ஓவர்களில் 120, ஹென்றி கிளாசன் 33, மெண்டிஸ் 27, நிதீஷ் குமார் ரெட்டி 19, பாட் கம்மின்ஸ் 14, வைபவ் அரோரா 3/29, வருண் சக்ரவர்த்தி 3/22, ஆண்ட்ரு ரசல் 2/21, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன் தலா ஒரு விக்கட்) 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (1 ரன்) மற்றும் சுனில் நரேன் (7 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன் பின்னர் ஆடவந்த அஜிங்க்யா ரஹானே (27 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 60 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), ரிங்கு சிங் (17 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய நால்வரும் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 200 எடுத்தது.  

          201 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில்  நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். பிறர் ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை. ட்ராவிஸ் ஹெட் (4 ரன்), அபிஷேக ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (2 ரன்), அனிகேத் வர்மா (6 ரன்), ஹர்ஷல் படேல் (3 ரன்), சிம்ரஜீத் சிங் (பூஜ்யம் ரன்), ஷமி (ஆட்டமிழக்காமல் 2 ரன்) ஆகியோர் ஒற்றை இலக்க ரன் எடுத்தனர்.

இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நிதீஷ் குமார் ரெட்டி (19 ரன்), கமிந்து மெண்டிஸ் (27 ரன்), ஹென்றி கிளாசன் (33 ரன்), பாட் கம்மின்ஸ் (14 ரன்) ஆகியோர் ஆவர். கொல்கொத்தா அணிக்கு இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வைபவ் அரோரா 29 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். வருண் சக்ரவர்த்தியும் 3 விக்கட் எடுத்தார். சுழல்பந்து வீச்சாளர்கள் மூவரும் விக்கட் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

          கொல்கொத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories