
ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 12.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லக்னோ vs குஜராத்
குஜராத் அணியை (180/6, ஷுப்மன் கில் 60, சாய் சுதர்ஷன் 56, ரூத்ர்ஃபோர்ட் 22, ஜாஸ் பட்லர் 16, ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 11, ஷர்துல் தாகூர் 2/34, ரவி பிஷ்னோய் 2/36, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (19.3 ஓவர்களில் 186/4, நிக்கோலஸ் பூரன் 61, எய்டன் மர்க்ரம் 58, ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 28, ரிஷப் பந்த் 21, பிரசித் கிருஷ்ணா 2/26, ரஷீத் கான், வாஷிங்க்டன் சுந்தர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த குஜராத் டைடன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (37 பந்துகளில் 56 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 60 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.
முதலில் ஷுப்மன் கில் 13ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் 14ஆவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 122/2. மீதமிருந்த 6 ஓவர் 5 பந்துகளில் 58 ரன்னுக்கு நான்கு விக்கட்டுகளை குஜராத் அணி இழந்தது மாபெரும் சோகம். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.
181 என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய லக்ணோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இன்று மிட்சல் மார்ஷ் ஆடாததால் ரிஷ்ப் பந்த் (18 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) தொடக்க வீரராக இறங்கினார். அவரொடு களமிறங்கிய எய்டன் மர்க்ரம் (31 பந்துகளில் 58 ரன், 9 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.
ரிஷப் ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த நிக்கோலஸ் பூரன் (34 பந்துகளில் 61 ரன், 1 ஃபோர், 7 சிக்சர்) வழக்கம்போல் சிறப்பாக ஆடினார். அதன் பின்னர் ஆயுஷ் பதோனி (20 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), டேவிட் மில்லர் (11 பந்துகளில் 7 ரன்), அப்துல் சமத் (3 பந்துகளில் 3 ரன்) ஆகியோர் ஆட்டத்தை வெற்றியோடு முடித்தனர். 19.3 ஓவர்களில் லக்னோ அணி 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மட்டையாளர் எய்டன் மர்க்ரம் அறிவிக்கப்பட்டார்.
பஞ்சாப் vs ஹைதராபாத்
பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (245/6, பிரியான்ஷ் ஆர்யா 36, பிரப்சிம்ரன் சிங் 42, ஷ்ரேயாஸ் ஐயர் 82, நேஹல் வதேரா 27, மார்குச் ஸ்டோயினிஸ் ஆட்டமிழக்காமல் 34, ஹர்ஷல் படேல் 4/42, ஈசன் மலிங்கா 2/45) சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி (18.3 ஓவர்களில் 247/2, ட்ராவிஸ் ஹெட் 66, அபிஷேக் ஷர்மா 141, ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 21, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 9, அர்ஷதீப் சிங், சாஹல் தலா ஒரு விக்கட்) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. தொடக்க் வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் (23 பந்துகளில் 42 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (13 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அதன் பின்னர் ஆட வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (36 பந்துகளில் 82 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நெஹல் வதேரா (22 பந்துகளில் 27 ரன், 2 ஃரன் சேர்க்கையைத் துரிதப்படுத்தினர். அவருக்குப் பின்னர் ஆட வந்த ஷஷாங்க் சிங் (2 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (3 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.
18ஆவது ஓவரில் மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆட்டமிழக்க மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் மார்கோ ஜேன்சன் இருவரும் ஆடவந்தனர். 20ஆவது ஓவரில் கடைசி நான்கு பந்துகளையும் ஸ்டோயினிஸ் சிக்சர் அடித்தார்.
இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமி தனது நான் கு ஓவர்களில் 75 ரன் கொடுத்தார். மிக மோசமான பந்துவீச்சு. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. ளில் 219/6 என உயர்த்தினர்.
20 ஓவர்களில் 246 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (37 பந்துகளில் 66 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (55 பந்துகளில் 141 ரன், 14 ஃபோர், 10 சிக்சர்) இருவரும் தடாலடியான தொடக்கம் தந்தனர்.
ட்ராவிஸ் ஹெட் 13ஆவது ஓவரிலும் அபிஷே ஷர்மா 17ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அபிஷேக் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 222/2. அடுத்த 13 பந்துகளில் வெற்றிக்குத் தேவையான 24 ரன்களை எடுத்து ஹதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் மட்டையாளர் அபிஷேக் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.