IPL 2025: கடைசி கட்டத்தில் விறுவிறுப்பு சேர்க்கிறார்களாம்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs டெல்லி – லக்னோ – 24.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (206/8, ஷ்ரேயாஸ் ஐயர் 53, மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆட்டமிழக்காமல் 44, ஜோஷ் இங்கிலிஷ் 32, பிரப்சிம்ரன் சிங் 28, முஸ்டாஃபிசுர் ரஹ்மான் 3/33, விப்ராஜ் நிகம் 2/38, முகேஷ் குமார் ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் 208/4, சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்கமல் 58, கருண் நாயர் 44, கே.எல். ராகுல் 35, டியு பிளேசிஸ் 23, செதிகுல்லா அடல் 22, ஸ்டப்ஸ் ஆட்டமிழக்கமல் 18, ஹர்பிரீத் ப்ரார் 2/41, மார்கோ ஜேன்சன், ப்ரவீண் துபே தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரப் சிம்ரன் சிங் (18 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர்)மூன்றாவதாகக் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஷ் (12 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து பவர்பிளே ஓவர்களில் 60 ரன் எடுக்க உதவினார்.

அவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (34 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), நேஹல் வதேரா (16 பந்துகளில் 16 ரன், 1 ஃபோர்), ஷஷாங்க் சிங் (10 பந்துகளில் 11 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (16 பந்துகளில் 4 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோர் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 206 என்ற அளவிற்கு உயர்த்தினர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

கே.எல். ராகுல் (21 பந்துகளில் 35 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்), ட்யூ பிளேசிஸ் (15 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), கருண் நாயர் (27 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), செதிகுல்லா அடல் (16 பந்துகளில் 22 ரன், 2 சிக்சர்), சமீர் ரிஸ்வி (25 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (14 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர்) ஆகியோர் நன்றாக ஆடி 19.3 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 208 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்னமும் நான்கு ஆட்டங்கள் மீதமுள்ளன.

நாளை, ஞாயிறு அன்று இரண்டு ஆட்டங்கள் (1) குஜராத் – சென்னை குஜராத் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தி இருக்கும்; (2) கொல்கொத்தா-ஹைதராபாத் – எந்த அணி வெற்றி பெற்றாலும் அதனால் தாக்கம் இல்லை; திங்கள் அன்று மும்பை-பஞ்சாப் – மும்பை வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்திற்குச் செல்லும்;

ஒருவேளை பஞ்சாப் வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்தில் ஒன்றைப்பெறும்.

கடைசி ஆட்டம் லக்னோ-பெங்களூரு எந்த வெற்றி பெற்றாலும் தாக்கம் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories