
ஐ.பி.எல் 2025 – 24.05.2025 இரண்டு ஆட்டங்கள்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை vs குஜராத்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (230/5, டிவால்ட் ப்ருவிஸ் 57, தேவன் கான்வே 52, உர்வில் படேல் 37, ஆயுஷ் மஹத்ரே 34, ரவீந்த ஜதேஜா 21, ஷிவம் துபே 17, பிரசித் கிருஷ்ணா 2/22, சாய் கிஷோர், ரஷீத் கான், ஷாருக் கான் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (18.3 ஓவர்களில் 147, சாய் சுதர்ஷன் 41, அர்ஷத் கான் 20, ஷாருக் கான் 19, அன்ஷுல் காம்போஜ் 3/13, நூர் அகமது 3/21, ஜதேஜா 2/17, கலீல் அகமது, பதிரனா தலா ஒரு விக்கட்) 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மஹத்ரே (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரரான தேவன் கான்வே (35 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மூன்றாவதாகக் களமிறங்கிய உர்வில் படேல் (19 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து முதல் 10 ஓவர்களில் 107 ரன் எடுக்க உதவினர். அவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே (8 பந்துகளில் 17 ரன், 2 சிக்சர்) விரைவில் ஆட்டமிழந்துவிட்டார். அடுத்து களமிறங்கிய டிவால்ட் ப்ருவிஸ் (23 பந்துகளில் 57 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ரவீந்தர் ஜதேஜா (18 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஆகியோர் அதிரடியாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 230 என்ற அளவிற்கு உயர்த்தினர்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 35 ரன் எடுத்தது. அன்ஷுல் காம்போஜ் 2 விக்கட்டுகளையும் கலீல் அகமது ஒரு விக்கட்டையும் எடுத்தார். சென்னை வித்தியாசமாக முதல் ஓவரை ரவீந்தர் ஜதேஜாவைக்கொண்டு வீசியது. முதல் ஐந்து மட்டையாளர்களில் சாய் சுதர்ஷன் (28 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர்) மட்டும் சிறப்பாக ஆடினார். பிற வீரர்களான ஷுப்மன் கில் (9 பந்துகளில் 13 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (7 பந்துகளில் 5 ரன்), ரூதர்ஃபோர்ட் (4 பந்துகளில் பூஜ்யம் ரன்), ஷாருக் கான் (15 பந்துகளில் 19 ரன், 2 சிக்சர்), ராகுல் திவாத்தியா (10 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர்), ரஷீத் கான் (8 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர்) ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 83 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது இருவரும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். ஜதேஜா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார்.
சென்னை அணியின் டிவால்ட் ப்ருவிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் குஜராத் அணியின் முதலிடத்திற்கு சிக்க்சல் வந்துள்ளது. அது 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது ஆனால் அடுத்துவரும் இரண்டு ஆட்டங்களில் பஞ்சாப் மற்றும் பெநளூரு அணி வெற்றிபெற்றல் 19 புள்ளிகளுடன் முதலிடத்திற்குப் போட்டியிடும். ஒருவேளை மும்பை-பஞ்சாப் ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்திற்குச் செல்லும்; ஒருவேளை பஞ்சாப் அந்த அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் மற்றும் நல்ல ரன் ரேட்டுடன் குஜராத் அணியை விட முன்னிடத்தைப் பெறும்.
ஹைதராபாத் vs கொல்கொத்தா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (278/3, ஹென்றி கிளாசன் 105, ட்ராவிஸ் ஹெட் 76, அபிஷேக் ஷர்மா 32, இஷான் கிஷன் 29, அனிகேத் வர்மா 12, சுனில் நரேன் 2/42, வைபவ் அரோரா 1/39), கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (18.4 ஓவர்களில் 168, மணீஷ் பாண்டே 37, ஹர்ஷித் ராணா 34, சுனில் நரேன் 31, அஜிங்க்யா ரஹானே 15, உனத்கட் 3/24, ஈஷன் மலிங்கா 3/31, ஹர்ஷ் துபே 3/34) 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. கொல்கொத்தா அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்கூட பிளேஆஃப் செல்ல முடியாது. எனவே ஒரு முக்கியத்துவம் இல்லாத இந்த ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணியின் மட்டையாளர்கள் தடாலடியாக ஆடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்கள். கொல்கொத்தா அணி மட்டையாளர்கள் 22 ஃபோர் மற்றும் 19 சிக்சர்கள் அடித்தார்கள். கிளாசன் 39 பந்துகளில் 105 ரன் அடித்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 278 ரன் அடித்தது.
இந்த மிகக் கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா அணி பல தவறுகள் செய்தது. அதிரடி மட்டையாளர்கள் பலரைக் கொண்ட கொல்கொத்தா அணியில் ஒருவர் கூட இன்று எரிமலையாய் வெடிக்கவில்லை. இதனால் 18.4 ஓவர்களில் 168 ரன்னிற்கு அனைத்து விக்கட்டைகளையும் இழந்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது





