சென்னையின் எப்சி அணிக்கு இங்கிலாந்தை சேர்ந்த கெவின் ஹிட்ச்காக் கோல் கீப்பிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சியின் பயிற்சியாளராக இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கிரிகோரி இருக்கிறார். அவர் பயிற்சியின் கீழ் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதால், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணியின் உதவி பயிற்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த பால் குரோவ்ஸ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கெவின் ஹிட்ச்காக்(55) சென்னை அணியின் புதிய கோல் கீப்பிங் பயிற்சியாளராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்தின் பர்மிங்காம் கிளப் அணியின் கோல் கீப்பிங் பயிற்சியாளராக பணியாற்றியவர்
சென்னையின் எப்சி அணிக்கு புதிய கோல்கீப்பிங் பயிற்சியாளராக கெவின் ஹிட்ச்காக் நியமனம்
Popular Categories



