யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் காயம் காரணமாக பாதியில் விலகினார்.ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான ரபேல் நடாலுடன் சக ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் (36 வயது) மோதினார். நடால் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் பெர்ரர் 4-3 என முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக விலகினார். அடுத்த சீசனுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள பெர்ரர், இதுவே தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டி என்று அறிவித்தார். அவருக்கு நடால் ஆறுதல் கூறி வழியனுப்பினார். உலக தரவரிசையில் டேவிட் பெர்ரர் 3வது ரேங்க் வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விடைபெற்றார் டேவிட் பெர்ரர்
Popular Categories



