வறுமை தாண்டவமாடும் வாழ்க்கையிலும், தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் ஜொலித்து வருகிறார் மாற்றுத்திறனாளி அம்பிகாபதி. தங்க மங்கையாக வலம் வரும் இவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி. 33 வயதான இவர், 3 அடி உயரத்தில் 5 வயது சிறுமியை போல காட்சித் தருவதால் மற்றவர்களின் கேலிக்கு பயந்து பள்ளிக்கு செல்லவில்லை. 2008-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்க சென்ற போதுதான் அம்பிகாபதியின் திறமை அவருக்கே தெரிய வந்துள்ளது. விளையாட்டாக மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர் ஓட்டப்பந்தயம், தடகளம் என அனைத்திலும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஊர்க்கிணற்றில் நீச்சல் பழகிய அம்பிகாபதி போட்டிக்காக நீச்சலில் தீவிரமாக பயிற்சி பெற்றார். 2015-ம் ஆண்டு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 4 தங்கங்களை வென்றதோடு, மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியிலும் 3 தங்கங்களை வென்று சாதித்துள்ளார்.
துணி தைத்து வரும் வருமானத்தில் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் எதிர்நீச்சல் போட்டு, தங்கமங்கையாக வலம் வரும் அம்பிகாபதிக்கு, நிரந்தர வருமானத்திற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பிகாபதியின் வீடு முழுவதும் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், வெற்றிக் கோப்பைகளையும் வைக்க இடமில்லாமல் மூட்டை கட்டி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற அரசு உதவ வேண்டும் என்பதே மங்களமேடு கிராம மக்களின் விருப்பமாக உள்ளது.
ஆப்கானில் இரட்டை வெடி குண்டு தாக்குதல் : 20 பேர் பலி; 70-வது பேர் காயம்
ஆப்கானில் நடந்த இரட்டைகுண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கான் தலைநகர் காபூலில் மல்யுத்த பயிற்சி மையம் உள்ளது. இங்கு நேற்று சிலர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கரவாதிகள் பயிற்சி மையத்திற்குள் மனித குண்டாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.பயிற்சி மையத்திற்குள் இருந்து வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
பின்னர் இரண்டாவது முறையாக கார் குண்டு தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். 65-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் பலர் பலியாகியுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன், ‘என்று முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலில் 7 போலீசார் வீர மரணம் அடைந்தனர். அதையடுத்து, போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் இந்த பதிலடி தாக்குதலில் 7 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது




