December 5, 2025, 9:43 PM
26.6 C
Chennai

கர்த்தர் யார்? – காஞ்சி மகாபெரியவர் சொன்ன விளக்கம்!

kanchi periyava - 2025

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது……யாரிடம்?

“அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா..” மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.

காரணம், எங்கள் பிதா…என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

“ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! “அன்பே சிவம்”…ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!

திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார். அதுல அன்பைப்பத்தி, மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்…ன்னு மஹாபாரதத்ல வருது. அதுல, “கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா”ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு. நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடி யிலிருந்தே….நாங்க பகவானை “கர்த்தர்”ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை பண்றேள்! ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ பேசறதில்லை! ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி ! ஒரு தாயார், தன்னோட கொழந்தை துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!…..

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய் வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் ! எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர
ஜனங்கள் ..ட்ட போனதுமே ஒங்களோட மதத் தத்துவத்தை சொல்றதில்லை; பால் பவுடர், ரொட்டி, துணிமணி…ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்! மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்… அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்….”

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்! உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் பெரியவாளுடைய ஒவ்வொரு சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

“எங்கள் கர்த்தர்….தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்” கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்….”கர்த்தர்…ரொம்ப கருணையானவர்…ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே?….”

பாதிரியார், “நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!..” என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா. அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம் பண்ணுவதற்கு “இவ்வளவுதான் இதில் இருக்கிறது” என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது.

சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள் அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories