இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதளத்தை வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் முடக்கினர்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாசுக்கு தவறான வகையில் அவுட் கொடுக்கப்பட்டதாகக் கூறி அவர்கள், ஹேக் செய்துள்ளனர். இணையதளத்தின் முகப்பில் லிட்டன் தாஸ், ஸ்டம்பிங் செய்யப்படும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளனர். அதில், லிட்டன் தாசின் கால்கள், சரியாக கோட்டில் இருக்கும் போது அவுட் கொடுத்தது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நியாயம் கிடைக்காவிட்டால் ஒவ்வொரு முறையும் இணையதளம் முடக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்,




