December 5, 2025, 4:57 PM
27.9 C
Chennai

ரஃபேல் ஜோக்ஸ்…! ராஹுல் ராக்ஸ்…!

rahulgandhi answers - 2025? சொல்லுங்க ராகுல்ஜி , ரஃபேல்ல உங்களுக்கு என்ன பிரச்சினை?

? மோடிஜி, நாங்க ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்ன்ற விலையில வாங்க நினைச்சோம். நீங்க 1571 கோடி கொடுத்து வாங்கி இருக்கீங்க! ஒரு பிளேனுக்கு 1144 கோடி அதிகம்!

? நாங்க எத்தனை பிளேன் வாங்கி இருக்கோம்?

? முப்பத்தி ஆறு! 36 × 1144 கோடி அதிகமா கொடுத்து இருக்கீங்க!

? ஓகே, ராகுல்ஜி 526 கோடி கொடுத்து நீங்க என்ன வாங்க நினைச்சிங்க?

?ரஃபேல் போர் விமானம்!

? கரெக்ட், ஆனால் வெறும் விமானத்தை வச்சி யுத்தம் நடந்த முடியுமா?

? முடியாது, ஆயுதம் வேணுமே!

? ஆமாம். விமானத்தில் இருந்து எறிய ஏவுகணை வாங்கனும் இல்லையா?

? நாங்க அதையும் தான் வாங்க நினைச்சோம்! ஆமாம்.!

? ரஃபேல் விமானம் வாங்க நினைச்சீங்க ஏவுகணைகளையும் வாங்க நினைப்பீர்கள்! ரஃபேல் போர் விமானம் தயாரிக்கும் கம்பெனி ஏவுகணை தயாரிக்குமா?

? அது எப்படி தயாரிக்கும்! ஆயுத உற்பத்திபண்ற கம்பெனி தான் ஏவுகணை உற்பத்தி பண்ணும்!

? சரி, நீங்க சொன்ன 526 கோடியில இந்த ஏவுகணை விலை சேருமா?

? அது எப்படி சேரும்? அது தனி கம்பெனி தனி கணக்கு!

? அப்புறம் ராகுல்ஜி , யுத்தம் நடக்கும் போது நம்ம போர் விமானம் பாகிஸ்தான் அல்லது சீன வான்வெளியில் பறக்கும் இல்லையா?

? அப்கோர்ஸ் , அதுக்கு தானே போர் விமானம் வாங்கறோம்!

? அப்படி பறக்கும் போது அந்த நாட்டு ராணுவம் நம்ம விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி பண்ணும் இல்லையா?

? கட்டாயம்…. கட்டாயம்!

? அப்படி சுட்டு வீழ்த்த நம்ம விமானத்தோட நடமாட்டத்தை எதைக் கொண்டு கண்டுபிடிப்பாங்க?

? அவங்க கிட்ட இருக்கிற ரேடார் வச்சு தான்!

? அதில் இருந்து தப்பிக்க நம்ம விமானத்துக்கு என்ன வழி?

? எதிர் நாட்டு ரேடாரை ஏமாத்தி திசை திருப்பும் ரேடார் நம்ம விமானங்கள்ல இருக்கும்!

? 36 விமானங்களுக்கு 36 கருவி இருக்குமா?

? நிச்சயமா இருக்கும்!

? அதை ரஃபேல் போர் விமானம் தயாரிக்கும் கம்பெனி பண்ணுமா?

? நோ நோ , அந்த கம்பெனி விமானம் மட்டும்தான் உற்பத்தி பண்ணுது! இந்த கருவியை வேற கம்பெனி உற்பத்தி பண்ணுது!

? நீங்க அதை வாங்க நினைச்சீங்களா ராகுல்ஜி?

? ஆமாம் வாங்க நினைச்சோமே!

? அது இந்த 526 கோடில அடங்குமா?

? அதெப்படி மோடிஜி? பொருளே வேற , உற்பத்தி பண்ற கம்பெனியும் வேற!  அது தனி பில் மோடிஜி!

? நாங்க வாங்கின விலையில ரஃபேல் விமானம் ஏவுகணை ரேடார் எல்லாம் அடக்கம் ராகுல்ஜி!

? ஆனாலும் 1571 கோடி……

?ராகுல்ஜி நீங்க வாங்க நினைச்ச ரஃபேல் விமானத்தில் கூட மாற்றம் செய்து இருக்கோம் ஜி. எல்லா சீதோஷ்ண நிலையிலும் குறிப்பா பனி படர்ந்த – குளிர் பிரதேசங்களில் கூட தடையில்லாமல் பறக்கும் படி வடிவமைப்பு செய்து இருக்கு! அதுக்கு கூடுதல் செலவு ஆகும் தானே?

?…. ம்…….

? ரஃபேல் போர் விமானங்களுக்கு முன்கூட்டியே ஸ்பேர் ஸ்பார்டஸ் வாங்க நீங்களும் நினைச்சி இருந்தீர்களா ராகுல்ஜி!

?ஆமா , போர் விமானங்களாச்சே திடீர்னு எதாவது ஆனால் அப்போ போய் ஸ்பேர் ஸ்பார்டஸ் தேடிக்கிட்டு இருக்க முடியுமா?

? அந்த செலவு இந்த 526 கோடில வருமா ?

? அது எப்படி மோடிஜி வரும்? கார் வாங்கினா ஸ்பேர் ஸ்பார்டஸ் தராங்களா என்ன? அப்படி தானே இதுவும்! அது தனி பில்லுஜி!

? அப்புறம், விமானங்களை பராமரிக்கிற வேலை ரஃபேல உற்பத்தி பண்ற கம்பெனியே பார்த்துகிட்டா நல்லது இல்லையா?

? நாங்க வாங்க நினைச்சப்பவும் இது உண்டு மோடிஜி!

? அந்த செலவு இந்த 526 கோடியில வருமா?

? அதெல்லாம் எப்படி வரும்?

? கார் வாங்கினா கூட ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஃப்ரீ சர்வீஸ் மட்டும் தானே
பண்ணுவாங்க? இது போர் விமானம்! தனி பில் மோடிஜி!

? நாங்க ரஃபேல் விமான உற்பத்தி நிறுவனமேபத்து வருஷம் மெயின்டெய்ன்ஸ் வேலையை செய்ய ஒப்பந்தம் போட்டு இருக்கோம் ராகுல்ஜி. அந்த செலவு கூட இந்த 1571 கோடில அடக்கம்ஜி!

? சரி மோடிஜி நான் கிளம்பறேன்! நிறைய நியூஸ் சேனல்காரங்க எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க!

? கொஞ்சம் இருங்க ராகுல்ஜி . அந்த 1571கோடி  கணக்கில் இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கு!

? மோடிஜி நாங்க 526 கோடிக்கு வாங்க நினைச்சோம்…நீங்க அதே விமானத்தை 1571 கோடி கொடுத்துவாங்கி இருக்கீங்க.அவ்வளவு தான்!

? ராகுல்ஜி இவ்வளவு நேரம்  பேசியுமா இப்படி சொல்றீங்க?

? மோடிஜி நேத்து ஒரு பேச்சு  இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசற வழக்கம் இந்த ராகுல் காந்திக்கு கிடையாது!

? …….. சரி ராகுல்ஜி உங்க இஷ்டம்

  • வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories