ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்தும் தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரியும் திருப்புல்லாணி அருகே மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தை அடுத்து, கீழக்கரை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.




