இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தற்சமயம் எந்த முடிவும் எடுக்கபோவதில்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடதக்கது.


