மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில், காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையேயான நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரை இந்தியா கைபற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது.




