மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடரில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. பரபரப்பான இப்போட்டி கயானா புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30க்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 52 ரன் வித்தியாசத்தில் தோற்றதால், இந்த போட்டியில் கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கும் நிலையில், பாகிஸ்தான் முதல் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.




