ஊத்தங்கரை : மக்கள் நீதி மய்யத்தின் மீது மக்கள் கொண்ட அன்பினால், வரும் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து வெற்றியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அக் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன் … தனக்கு மக்கள் நலனே முக்கியம் என்பதால், மக்களாகிய தங்களையே சுற்றி வருகிறேன். மக்களுக்கு பயன்தரும் வகையில், செயலி உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.
ஊத்தங்கரையில் அவர் பேசியவற்றிலிருந்து….
கிராம சபை, மய்யம் விசில் என்று பல ஜனநாயக ஆயுதங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுக்கு கொடுத்து வருகிறது.
நான் மக்களைச் சுற்றியே வருகிறேன், அதற்கு காரணம் மக்களின் நலன் மட்டுமே.
மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை என் மீது நீங்கள் காட்டும் அன்பினால் எனக்கு அதிகரிக்கிறது.
மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெண்கள் விவசாயிகள், தொழிலாளிகள் என அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. நடக்கும் ஆட்சி மீது கோபம் உள்ளது. அக்கோபத்தை சரியாக மடைமாற்றினால் நாளை நமதே!
கிராம சபை, மய்யம் விசில் என்று பல ஜனநாயக ஆயுதங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுக்கு கொடுத்து வருகிறது.
தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களிடையே கமல் பேச்சு
* கொஞ்சம் கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை, மொத்தமாக செய்ய வேண்டியது தான்.
ஒரு அரசியல்வாதியாக என்னுடன் மக்கள் நடத்தும் உரையாடல் எனக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
நாம் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திட வேண்டும்




