- அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான்.
- தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்.
- பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது , அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?
- பாலாறு தடுப்பணை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் போது இது குறித்து ஏதேனும் பேசினாரா?
- தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே?
- தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம்
- கமலுக்கு 64 வயது ஆகிவிட்டதால் சினிமாவில் நடிக்க முடியாமல் அரசியலில் நடிக்க வருகிறார்
- இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலைக்கு சமம்
- சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம்.
- கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது?
- ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
- இலவசம் வேண்டாம் என்றால் கல்வியும் விலை இல்லாமல் தான் தருகிறோம் அதனால் படிக்காமல் இருந்து விட முடியுமா?
- சர்கார் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் உறவினர்கள் கூட அரசின் விலையில்லா பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்
- – என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார். இவை தமிழகத்தில் இப்போது பரவலாக பரபரப்பாக பேசப் பட்டு வருகின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய கேள்விகள்…!
Popular Categories




