Tag: மாநில நலன்
எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-8’; மாநில வளர்ச்சிக்கு முதல்வர் இனி என்ன செய்ய வேண்டும்?
நமக்கு நம் மாநில வளமும் நலமும் முதலில் முக்கியம். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல் முறையாக, மத்திய அரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற வாதத்தை சட்டமன்றத்தில் வைத்தாலும் கூட, அதை அரசியல் காரணங்களுக்காக என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொண்டால் மாநிலத்துக்கு நல்லது என்ற அவரது மாநிலத்தின் நலன் சார் நோக்கத்தில் குறைகாணாமல் ஆதரவளிக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-6’; உலக முதலீட்டாளர் மாநாடும்; தமிழகம் பெற்றதும்!
ஆனால், முதல் முதலீட்டாளர் மாநாட்டில் கிடைத்த பலன்கள் என்ன என்று அறிவதற்கு முன்னமே, அடுத்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்ற ஓரிரு மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். அதன் மூலம் கோமாவில் படுத்தது தமிழக அரசும் தொழில்துறையும் மாநிலத்தின் முன்னேற்றமும்தான்!
எடப்பாடி சொன்ன ‘மத்திய அரசுடன் இணக்கம்-5’; விரோத அரசியலில் மூழ்கித் திளைத்த ஜெயலலிதா!
அஇஅதிமுக., விஷயத்தில் பிரச்னை வேறு விதமானது! தனது இரட்டை நிலைப்பாடுகளால் அது மேலும் குழம்பியது! திமுக., மீது கடும் விரோதத்தில் இருந்தார் ஜெயலலிதா. மத்திய அமைச்சரவையில் திமுக.,வினர் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்தனர். அவர்கள் மீதான விரோதம், மத்திய அரசின் மீதான விரோதமாகவே தெரிந்து குழப்பியது ஜெயலலிதாவுக்கு. மத்திய அமைச்சரவையை அவர் அப்படித்தான் பார்த்தார்.
மத்திய அரசுடன் இணக்கம்; முதல்வர் எடப்பாடி சொன்ன உண்மையின் பின்னணி -1
பொதுத் துறை திட்டங்களில் எந்த வகைகளில் எல்லாம் மிகப் பெரும் முதலீடுகளைச் செய்ய முடியும் என்று மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் திட்டங்களே, மத்திய மாநில அரசுகளின் உறவுப் பாலத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்களாகக் காட்ட முடியும்.