
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை முதல்வர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் 12, 16,18 ஆகிய தேதிகளில் அதிமுக வேட்பாளரான எம் ஆர் முத்துசெல்வனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 13,14,17 ஆகிய தேதிகளில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17,ம் தேதி நாங்குநேரியிலும், 18ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும் அவர் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம். ( Revised Election Campaign Schedule). pic.twitter.com/kuBA7C3pCm
— AIADMK (@AIADMKOfficial) October 3, 2019