10 வயது சிறுமியை வன்புணர்வுக்கு ஆட்படுத்திய கிழவன் கைது!

கிரைம் நியூஸ் தமிழகம்
chil sexual harasment - 2026

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய முதியவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (57). இவர் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியதோடு சிறுமியின் உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளார்.

சிறுமியின் உடலில் காயத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது, நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பெற்றோர் பந்த நல்லூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மீது புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கைது செய்த காவல்துறையினர் அவரை தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.