கொழுந்தியாவுக்கு குழந்தை கொடுத்தவன்! காவலர் தேடலில்!

Published:

woman 1 - 2026

மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் காராப்பாடி. இக்கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். வயது 22.

கட்டிட தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
புவனேஸ்வரன் மனைவியின் தங்கையான லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளியின் கோடை விடுமுறைக்காக மே மாதம் தனது அக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

பல ஆண்களுக்கும் மனைவியின் தங்கையை இலவச இணைப்பாகத் தானே நினைக்கின்றனர் அப்போது மனைவியின் தங்கை என்றும் பாராமல் புவனேஸ்வரன், செல்வியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லதா சுமார் 10 நாட்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் புவனேஸ்வரன். பின்னர் கோடை விடுமுறை முடிந்து அங்குள்ள பள்ளிக்கு வழக்கம்போல பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார் லதா.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

விடுதியில் தங்கியிருந்த லதாவிற்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படவே அதனை கவனித்த விடுதிக் காப்பாளர் லதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போதுதான் லதா நான்கரை மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தன் அக்காவின் கணவர்தான் இந்த நிலைமைக்கு காரணம் என லதா கூறியுள்ளார்.

இதனையடுத்து லதாவின் அம்மா இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி புவனேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img