
மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து நடிகர் விவேக் சாடியுள்ளார்.
இதுகுறித்து நடிகை விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே.
அஜாக்கிரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு’ என்று பதிவிட்டுள்ளார்.
சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு.
— Vivekh actor (@Actor_Vivek) October 26, 2019