மணமாகி ஐந்தே நாள்! 18 வயது பெண்! தூக்கிட்டு தற்கொலை… காரணம்?

sivasakthi - 2026

தேனியில் திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில் மணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி 22, இவருக்கும் குரங்குமாயன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகளான சிவசக்தி 18, ஆகிய இருவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமாகி மறுவீட்டு அழைப்பு முடிந்து சேதுபதி தனது மனைவியுடன் தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் வசித்து வந்துள்ளார்.

கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லாமல் வசித்து வந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.. இந்நிலையில் சேதுபதி வெளியே சென்ற நிலையில் சிவசக்தி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

இதையடுத்து நீண்ட நேரமாகியும் தனது மருமகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்துள்ளதால் மாமியார் புஷ்பவள்ளிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மாடியில் உள்ள தனது மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

உடனே அதிர்ச்சியடைந்த புஷ்பவள்ளி நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாத நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறி அமைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த கம்பியில் தனது மருமகள் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்தைப் பார்த்த உடனே அதிர்ந்துள்ளார். இதையடுத்து புஷ்பவள்ளி கூச்சலிட்டுள்ளார் .

அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிவசக்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்சில் அவரது உடலை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவசக்தி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்திருக்குமோ என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணையை அவரது கணவர் சேதுபதியிடம் இருந்து தொடங்கியுள்ளனர்.

மேலும் சிவசக்தி திருமணத்திற்கு முன்னர் வேறு யாரையோ விரும்பியிருக்கலாம் என்ற நோக்கத்தோடும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி 5 நாட்களிலேயே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories