
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாமில் போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டங்களின்போது வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்தனர்.
மேலும், இரண்டு பேர் வன்முறைக் கும்பலால் உயிரோடு கொளுத்தப்பட்டனர். போராட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
அரசு ஊழியர்கள் 4 லட்சம் பேர் கடந்த 22-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசுப் பணிகள் முடங்கின.
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தகவல்கள் பரவுகின்றன.
இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசு ஊழியர்கள், அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் அரசியல் சம்பந்தமான பதிவுகள் இடுவதற்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.
அவ்வாறு ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசு எச்சரித்துள்ளது.
இது அரசு ஆசிரியர்களுக்கும், ஒப்பந்த பணியாளர்களுக்கும் பொருந்து