அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைது!

தமிழகம் பொது தகவல்கள்
hm paliyal - 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கணவாய் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன்.

இவர் அப்பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் புகார் எழுந்துள்ளது.

kaithu - 2026

இதனைப் பற்றி அந்த சிறுமி பெற்றோர்களிடம் தெரிவிக்க, அச்சிறுமியின் பெற்றோர் இடையகோட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.

அதன் படி, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொப்பம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாமணி, பாதிக்கப்பட்ட மாணவியிடமும், அவரது பெற்றோரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அதன் பின்னர், இடையகோட்டை காவல் துறையினர் தலைமை ஆசிரியர் முருகனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.