திருமணம் எப்போது? கேட்ட காதலி.. காரியத்தை முடித்த ஜோதிடர் !

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
velaiammal - 2026

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசைப் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் கந்தசாமி. இவரின் மகள் வெள்ளையம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக வெள்ளையம்மாள் திருமணமான மூன்று மாதத்திலேயே அந்த நபரிடம் விவாகரத்து வேற்று தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற ஜோதிடருக்கும் வெள்ளையம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அதே சமயம் முத்து வெள்ளையம்மாளிடம் அடிக்கடி பணத்தை பெற்று கொண்டு செலவழித்து ஜாலியாக இருந்துள்ளார்.

ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெள்ளையம்மாள் முத்துவிடம் கேட்க அதற்கு முத்து மறுப்பு கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கடந்த 11ம் தேதி வெள்ளையம்மாளை போனில் தொடர்பு கொண்ட முத்து, திருச்சி அருகே உள்ள தொடையூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூற, அதை நம்பி அந்த இடத்திற்கு சென்ற வெள்ளையம்மாளை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அங்கிருந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் புதைத்துள்ளார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

இதனிடையே மகளை காணவில்லை என தந்தை கந்தசாமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் முத்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.