December 6, 2025, 9:08 PM
25.6 C
Chennai

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

IMG 20200124 WA0051 - 2025

1971ல் சேலத்தில் தி.க. கழிசடைகள் நடத்திய ஆபாச ஊர்வலம் தொடர்பான செய்திகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

துக்ளக், தி ஹிண்டு, தினமணி ஆகிய பத்திரிகைகள் பழைய செய்திகளை மீண்டும் வெளியிட்டு, மக்களுக்கு வரலாற்றின் கறை படிந்த பக்கங்களை நினைவுபடுத்தி இருக்கின்றன.

வரலாற்று அனுபவங்களில் இருந்து பாடம் கற்காதவன் முட்டாள். திமு.க. ஆட்சியில் இருந்ததால் அதிகாரத் திமிரில் தி.க. கழிசடைகள் நடத்திய 1971 அராஜகம் குறித்து கடவுளை நம்புவோர் அனைவரும் அறிவது அவசியம்,. இல்லாவிட்டால் ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என்று பல இடங்களில் தி.க. கழிசடைகள் வைத்துள்ள வாசகம் உண்மையாகிவிடும்.

தினமணியின் அன்றைய ஆசிரியர் திரு.ஏ.என்.சிவராமன் எழுதிய தினமணி தலையங்கமும் (16.02.1971), ஏ.என்.எஸ். டயரி் குறிப்புகளில் எழுதிய விமர்சனமும் (17.02.1971), இன்றைய (24.01.2020) தினமணி நாளிதழில் வெளியாகி உள்ளன.

உண்மைகள் உறங்குவதில்லை.

துக்ளக் பொன்விழாவில் இந்த உண்மையைத் தான் நடிகர் ரஜினிகாந்த் சொன்னார். அவரை மன்னிப்பு கேட்குமாறு மிரட்டினார்கள். அவர் அதனை நாகரிகமாக மறுத்திருக்கிறார். ‘உண்மையைச் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று அவர் சொன்னது, தமிழகத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விஷயத்தில் திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் அதிமுகவினரை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஜெயலலிதா அம்மையார் இருந்திருந்தால் இப்படி அதிமுகவினர் உளறுவார்களா?

இப்போது ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள் சில தி.க. காலிகள். இந்த வன்முறையாளர்களை எந்த அரசியல் தலைவரும் கண்டிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தி ஹிண்டு தவிர்த்து வேறெந்த ஊடகமும் தி.க.வினரின் மிரட்டல் போக்கைக் கண்டிக்கவில்லை. அந்தப் பத்திரிகையும் கூட இந்தக் கொலை மிரட்டலை கண்டுகொள்ளவில்லை.

அதிமுக அரசுக்கு உண்மையிலேயே மாநிலத்தைத் தாங்கள் தான் ஆள்கிறோம் என்ற எண்ணம் இருக்குமானால், ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்த ரௌடிகளை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

2020லேயே பலரது முன்னிலையில் இப்படி அராஜகமாகப் பேசுவோர் 1971இல் என்னவெல்லாம் பேசி இருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. 1971இல் தி.க.வினருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. அதேபோல, இன்றைய முதல்வர் எட்ப்பாடி பழனிசாமியும், ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்த குண்டர்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறாரா? நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

அன்றைய அராஜகத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய கயவர்கள் இந்த நாத்திக நாதாரிகள். ஆனால், உண்மைகள் வெளிவந்துவிட்டதே என்ற ஆங்காரத்தில், ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலத்தில் அமைதியைப் பேண வேண்டிய அரசு இனிமேலும் பொறுமை காக்கக் கூடாது. இந்த விஷயத்தில் மாநிலத்தில் உள்ள தனது கூட்டணி நண்பர்களை நிர்பந்திப்பது பாஜக தலைவர்களின் கடமை. அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories