பாத்ரூம் போகணும்னு சொல்லிட்டு பறந்தோடிய கைதி! தேடும் காவலர்கள்!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
search 3 - 2026

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள செங்காடு என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்,

மீது பல வழக்குகள் இருக்கின்றன. அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது.

சமீபத்தில் மதுராந்தகத்தை அடுத்த அணைக்கட்டு பகுதியில் ஒரு கொலை நடந்தது. அந்த கொலையின் முக்கிய குற்றவாளியான இவர், நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்து பின்னர் கைது செய்யப்பட்டார்.

valaja pettai - 2026

அதன் பின்னர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு காவல்துறை வெங்கடேசனை இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஆஜர் படுத்திய பின்னர், மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப் படும் வழியில் வெங்கடேசன் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதனை நம்பிய காவல்துறையினர், அவரை வாகனத்திலிருந்து இறங்குவதற்கு சம்மதித்துள்ளனர். அப்போது, அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடேசன் வாலாஜா சுங்கச்சாவடி அரு8கே தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.