வாழைப்பழம் சாப்பிட்டா உயிர் போகுமா? அறியாமலே இறந்த சிறுவர்கள்!

Published:

sundar - 2026

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுந்தர். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு 13 வயதில் சுனில் மற்றும் 9 வயதில் விமல் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்துமதிக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் பல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் அவருக்கு சரியாகவில்லை. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துமதி பரிதாபமாக உயிரிழந்தார். இது சுந்தருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து சுந்தர் மன விரக்தியுடன் தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

பின்னர் தனது குழந்தைகள் அனாதையாகிவிடுவார்களோ என பயந்த அவர் மகன்களையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

பின்னர் அவர் வாழைப்பழத்தில் பூச்சி மருந்தைக் கலந்து தனது இரு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் இருவரும் ஆசையோடு அந்த வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சுந்தர் மற்றும் அவரது மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இந்நிலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மூன்று பேரும் சடலமாக கிடந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img