பூச்சிக்கொல்லி பவுடரில் போண்டா! மருமகள் உயிரிழந்த பரிதாபம்!

தமிழகம் பொது தகவல்கள்
maidha ponda - 2026

பூச்சிக்கொல்லி மருந்தை மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அரக்கோணத்தில் நிகழ்ந்துள்ளது.

ஊரடங்கு என்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்னர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே வெளியில் வருகின்றனர். அந்த வகையில், அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மருமகள் பாரதி போண்டா செய்வதற்காக மைதா மாவு வாங்கி வர சொல்லியுள்ளார். இதனால் சென்ற பெரியசாமி மைதா மாவுடன், மிளகாய் தோட்டத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து கூடவே வாங்கி வந்துள்ளார்.

dead body 1 - 2026

இதை அறியாத அவரது மருமகள் பாரதி இரண்டையும் ஒன்றாக கலந்து போண்டா செய்து கணவர் சுகுமார் மாமியார் லட்சுமி, மாமனார் பெரியசாமி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.

இதனால் மொத்த குடும்பமும் மயங்கி விழுந்துள்ளனர். இதை தொடர்ந்து இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.