ஒரே வீட்டில்.. ஒரே ரூமில். தனித்தனி ஃபேனில் இரட்டையர்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் காட்பாடி பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை அடுத்த காட்பாடியை சேர்ந்த தம்பதி பாலசுப்பிரமணியம் – கௌரி. பாலசுப்பிரமணியம் ஒரு கட்டிட என்ஜினீயர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் பத்மகுமார் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இதில் மகள்கள் பத்மபிரியா, ஹரிப்பிரியா இருவருமே இரட்டையர்கள். 2 பேருக்குமே 17 வயது. 2 பேருமே காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்துள்ளனர்.
தற்போது பிளஸ் 2-வுக்கு செல்ல இருந்தனர். அதற்காக பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகின்றன. நேற்று காலை, ஆன்லைன் வகுப்புகள் நடக்க இருக்கிறது, அதை கவனிக்க போகிறோம் என்று சொல்லிவிட்டு, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள ரூமுக்கு சென்றனர். அதன்படியே ஆன்லைன் வகுப்புகளையும் கவனித்து கொண்டிருந்தனர்.
வீட்டின் கீழ்தளத்தில் கௌரியும், சகோதரன் பத்மகுமாரும் இருந்தனர். காலையில் போனவர்கள், நேரமாகியும் 2 பேரும் மாடியில் இருந்து இறங்கி கீழே வரவில்லை. சாப்பிடவும் வரவில்லை. அதனால் அவர்களை சாப்பிட அழைப்பதற்காக கௌரி மாடிக்கு சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டியிருக்கவும், தட்டியுள்ளார். ரொம்ப நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
அதனால் ஜன்னலை திறக்கலாம் என்றால் ஜன்னலும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதனால் பதட்டடைந்த கௌரி, உடடினயாக அக்கம்பக்கத்தினருக்கு தகவலை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர். ஜன்னலை உடைத்து பார்த்தபோது 2 பேருமே வேற வேற ஃபேனில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் கௌரி அலறி கதறி துடித்தார்.
உடனடியாக காட்பாடி போலீசாருக்கு தகவல் சொல்லவும் காவலர்கள் விரைந்து வந்து, ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள். 2 பேரின் சடலங்களையும் இறக்கி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமான வழக்கும் பதிவு செய்து எதற்காக இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதில் கௌரி சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இதனால் மகள்கள்தான் சாப்பாடு செய்து வந்திருக்கிறார்கள். ஸ்கூலுக்கும் சென்றுவிட்டு, சமையல் வேலையும் பார்த்து வந்துள்ளனர். பிள்ளைகளுக்கு 17 வயதே ஆவதால், சரியாக சமைக்க வரவில்லை போலும். எப்போது பார்த்தாலும் காரம், உப்பு போட்டு அதிகமா சாப்பாட்டில் போட்டுவிடுவதாக கௌரி, தன் மகள்களை அடிக்கடி திட்டிக் கொண்டே இருந்தாக சொல்லப்படுகிறது..
அதனால் அம்மாவுடன் ஏற்பட்ட தகராறில் இவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் போலீஸார் கருதுகிறார்கள். எனினும் முழு விசாரணை முடிந்தபிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என நம்பப்படுகிறது. ஒரே வீட்டில் ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் இரட்டையர்கள் தூக்கில் தொங்கியது காட்பாடி பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.