poison 1

சேலம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி ராம்ராஜ். இவர் நிலத்தை குத்தைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகிறார். இவருடைய மகள் லாவண்யா வயது 17 இவர் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்

இவர் பள்ளியில் படிக்கும் போதே கட்டிடத் தொழிலாளியான பிரபு என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்போது பள்ளியை முடித்துள்ளதால் பிரபுவை திருமணம் செய்து வைக்க கோரி வீட்டில் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் 18 வயது நிரம்பாததால் திருமணம் செய்ய முடியாது எனவே 18 வயது முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் பெற்றோர்கள் சொல் மீது நம்பிக்கை இல்லாத லாவண்யா உடனடியாக திருமணம் நடந்தே தீர வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏறபட்டுள்ளது. இதன் காரணமாக விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து லாவண்யா பூச்சி மருந்து அருந்தியுள்ளார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

வேலை முடித்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் லாவண்யா வாயில் நுரை தள்ளி தரையில் மயங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . உடனடியாக லாவண்யாவை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு லாவண்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending