முயல் வேட்டைக்கு சென்ற சிறுவர்கள்! தவறி தலையில் பாய்ந்த ஈட்டி! சிறுவன் பரிதாப மரணம்!

கிரைம் நியூஸ் தமிழகம்
essakki muthu 1 - 2026

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அம்பலச்சேரி மேலத்தெருவைச் சேர்ந்த தங்கத்துரையின் மகன் இசக்கிமுத்து. இவர் தனது சகோதரர் சுடலை மற்றும் 6 நண்பர்களுடன் முயல் வேட்டைக்குச் சென்றார்.

காட்டுப்பகுதியில் முயல் ஓடியதை கண்டு இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் விரட்டியுள்ளனர். அப்போது அவர்கள் முயலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றதாக தெரிகிறது.

இதில் இசக்கி முத்துவின் நண்பர்களில் ஒருவர் தான் கையில் வைத்திருந்த ஈட்டியை முயலை குறிபார்த்து அதன் மீது வீசியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த ஈட்டி எதிர்பாராதவிதமாக குறி தவறி இசக்கிமுத்துவின் தலையில் குத்தியது. இதில் அதனால் சகோதரர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்துவை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து உயிரிழந்தார். இசக்கிமுத்துவின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.