தமிழகத்தில் 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான சந்த்கபீர் விருது!

Weaving industry - 2026

சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர்கள் 5 பேருக்கு தேசிய விருதுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையம் ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளில் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் உயரிய விருதான சந்த்கபீர் விருதும், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது 4 நெசவாளர்களுக்கும் கிடைத்துள்ளது.

Weaving Award - 2026

இதன் மூலம் சிறந்த நெசவாளருக்கான தேசிய விருதுகளை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டிய பின்னர் பேசிய காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா, “நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான சந்த் கபீர் விருது இந்த ஆண்டு காஞ்சிபுரத்துக்கு கிடைத்திருக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான இந்த விருதை காஞ்சிபுரம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பி.கிருஷ்ணமூர்த்தி (61) பெறவுள்ளார். இந்த விருதுடன் ஒரு தங்க நாணயம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை, பெயர் பொறிக்கப்பட்ட தாமரப் பத்திரம், ரொக்கம் ரூ.3 லட்சம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் ஆகியனவும் வழங்கப்படும்.

சிறந்த நெசவாளர் என்ற முறையில் இவ்விருது கிடைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஏற்கெனவே விருது பெற்றிருந்தால் மட்டுமே இந்த உயரிய விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியும்.

இவரைத் தவிர மேலும் 4 பேர் தரமான கோர்வை ரக பட்டுச்சேலை வடிவமைத்தமைக்காக சிறந்த நெசவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெறுகிறார்கள்.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த காமாட்சி ஹரி, காஞ்சிபுரம் தர்மலிங்க நகரைச் சேர்ந்த சரளா கணபதி ஆகிய இருவரும் தம்பதியராக சேர்ந்து சிறந்த பட்டுப்புடவையை வடிவமைத்தமைக்காக வழங்கப்படவுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த ருக்மணி கண்ணியவேல் (49) காஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ள தெருவைச் சேர்ந்த ஏ.ஹரி (54) உட்பட இவர்கள் 4 பேரும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே சிறந்த நெசவாளர்களுக்கான 5 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கப்படுவது தாமதமாகி இருந்தது.

இவ்விருதுகள் புது தில்லியில் விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட இருப்பதாகவும் ஆர்.சசிகலா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories