ஆங்கிலப் புத்தாண்டு: கொடைக்கானலில் படகு சவாரிக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!

boat - 2026

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

இயற்கை அழகை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது.

அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது.

முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கை அழகை கண்டுகளித்தனர்.

மேலும், நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் குளிரையும் பொருட்படுத்தாமல், குளுகுளு சீசனை அனுபவித்தபடியே, சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் நகரம் திணறியது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் முன்னதாக புக் செய்யப்பட்டதால், தங்க இடம் கிடைக்காமல் கூட சுற்றுலாப்பயணிகள் தங்களது ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.

நகரில், நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்ததால், இதமான தட்பவெப்பநிலையை சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories