சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்! நாளை கடைசி!

Published:

jobs - 2026

ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள்‌ அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டடா என்ட்ரி ஆப்ரேட்டர், District Consultant, Social Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகம்.

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

பணி : Data Entry Operator (DEO), District Consultant, Social Worker, Refrigeration Mechanic. Multi Purpose Hospital Worker / Sanitary Worker மற்றும் ANM உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற் கல்வி நிறுவனத்தில் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI, இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

District Consultant – ரூ.35,000
Social Worker – ரூ.13,000
Data Entry Operator (DEO) – ரூ.10,000
Refrigeration Mechanic – ரூ.20,000
NRHM UPHC Multi Purpose Hospital Worker, Sanitary Worker – ரூ.8,500
ANM – ரூ.14,000
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரிலோ அல்லது விரைவு தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பப் படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌. பின், பூர்த்தி செய்து சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து 19.01.2022 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புகள் : இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img