8ம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கு நாமக்கல்லில் வருவாய்த்துறையில் வேலை வாய்ப்பு உள்ளது.
தகுதியுடைவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள் – தேனி மாவட்ட வருவாய்த் துறை 13 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரவு காவலாளி (Night man)மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கு 13 காலியிடங்கள் உள்ளன.
பணிபுரியம் இடம் – தேர்வு செய்யப்படுபவர்கள் நாமக்கல்லில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாள் – விண்ணப்பங்கள் ஆஃப்லைனில் நேரடியாக அனுப்ப வேண்டும். கடந்த 4ம் தேதி முதல் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 4, 2022.
கூடுதல் விபரங்களை www.namakkal.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தகுதிகள் : இரவு காவலாளி பணிக்கு படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : இரவு காவலாளி பணிக்கு 18 – 37, அலுவலக உதவியாளர் பணிக்கு 18-37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம் – மாதம் ரூ. 17,500 முதல், ரூ. 50 ஆயிரம் வரை
தேர்வு முறை – எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய்த்துறை (அ-பிரிவு) (முதல் தளம்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் – 637003.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.